இறுதி அஞ்சலி


என் இதயத்தை
இயக்கும் இனியவளே
இது உனக்கான
என்
கடைசிக் கவிதை.
உன்னிடம் சொன்னேன்
காற்றுக்கு பதில்
உனை மட்டுமே
சுவாசிக்கிறேன் என்று.
நீ
முன் அறிவிப்பின்றி
மூச்சு குழாயில்
முடிச்சு போட்டாய் .
உனக்காக
காத்திருந்த காலங்களில்
என் கை ரேகையும்
உதிர்ந்து போனது.
உன்னோடு
பேசாத நாட்களில்
மூச்சு காற்றை கூட
முயன்றுதான் சுவாசித்தேன்.
நீ வரமாட்டாய் என்று
தெரிந்தே
காத்திருந்தேன்
தினமும்.
இரவுகள் பல
உன் புகைபடத்தில்
என்னை
புதைத்து இருக்கிறேன்.
உன் சிரிப்பினால்
பல தடவை
சிதைந்திருக்கிறேன்.
என் கண்ணீர் துளிகள்
அத்தனையும்
உனக்காய்
செலவழித்த பின்னே
சேமிப்பதற்கு
ஒன்றுமில்லை.
அதனால்
இதுவே என் கடைசி துளி...
இந்த வேதனையை
விரும்புகிறேன்
அது உன்னால் என்பதால்.
உன் பெயர்
சொல்லும்போது
எதோ ஒரு உணர்வை
எனக்குள் உணர்கிறேன்.
அதை
கவிதையில்
எழுதும் முன்னே
கவிதை வரிகள் கூட
பேனா மைக்குள்
கரைந்து விடுகிறது.
எனக்கு கனவுகள் தந்தது
நீதான்...
காத்திருப்பதிலும்
சுகம் உணர்த்தியது
நீதான்...
எனக்குள் உயிரணுக்களை
உற்பத்தி செய்ததும்
நீதான்...
என்னை தனிமையில்
தனிக்க விட்டு
சென்றவளே
இழந்துவிட்ட நாட்களை
இன்னும்
இரவில் தேடிகொண்டிருகிறேன்.
உன்னால் நான் படும்
வேதனையை
என் தாயால்
தாங்கிகொள்ள முடியவில்லை.
எனக்கு பெண் பார்க்கும்
படலம்
தினமும்
நடந்து கொண்டுதான்
இருக்கிறது.
நீ தான் நம் காதல்
குழந்தையை
தெருவில் வீசிவிட்டு
சென்றாய்
என்னால் தான்
தூக்கி ஏறிய இயலவில்லை.
காதல் என்பது
கவிதை போல
அது
எழுதியவனை தவிர
நிறைய பேருக்கு
புரிவதில்லை.
ஆனால்...!!!
விருப்பமில்லாமல்
கேட்கிறேன்
விடுதலையை
உன் நினைவிலிருந்து
என்னை
விடுவித்து விடு.
என் காதலுக்கு
மரணமில்லை.
ஆனாலும்
அதற்கு
இன்று இறுதி அஞ்சலி...!!!
நேற்று உனக்கு நிச்சயதார்த்தம்
நேற்று உனக்கு நிச்சயதார்த்தம்
No comments:
Post a Comment