Pages

Wednesday, March 28, 2012

07 Bangkok Knockout 2011

Yipman out Bruce Lee in - 2011

NET WORTH STOCK BROKING LTD





NET WORTH STOCK BROKING LTD







நமது நிறுவனம் பங்கு சந்தை தொழில் செய்யும் ஒரு நிறுவனம்.நமது

நிறுவனம் கடந்த நான்கு வருடமாக செபி எனப்படும் மத்திய அரசின் கீழ்

செயல்படும் பங்கு சந்தை தொழிலில் ஈடுபட்டுள்ளது.இன்று உள்ள

சூழ்நிலையில் வேலைக்கு சென்று கொண்டோ அல்லது வேறு எதாவது

தொழில் செய்து கொண்டு முதலீட்டாளர்கள் தாங்களே பங்கு சந்தை

தொழிலில் முதலீடு செய்து தங்களது முதலீட்டை பெருக்குவது இயலாத

 காரியமாக உள்ளது.உங்களது முதலீட்டை பெருக்க  சிறந்த வாய்ப்பினை

நாங்கள் ஏற்படுத்தி கொடுக்கிறோம்.










நீங்கள் செய்யவேண்டியது ஓன்று மட்டும்தான்.




1நமது நிறுவனத்தில் உங்கள் பெயரில் ஓர் டீ மேட் கணக்கு ஒன்றை ஆரம்பிக்க வேண்டும்.

2.உங்களது பணத்தை உங்கள் கணக்கிலேயே வைத்துகொள்ளவும்.

3.உங்களது பணத்திற்கு வேலை செய்யும் உரிமையை மட்டும்  நமது நிறுவனத்திடம் கொடுக்கவும்.

4.உங்கள் கணக்கில் இருக்கும் பணத்தை உங்களை தவிர வேறு யாரும் எடுக்க முடியாது.

5.உங்கள் கணக்கில் வரும் லாபத்தையும் நீங்கள் மட்டுமே உங்கள் வங்கி கணக்கில் இருந்து எடுக்க முடியும்.

6.உங்கள் கணக்கில் இருக்கும் முதலீட்டு பணத்திற்கு 100% உத்திரவாதம்.


7.உங்கள் கணக்கில் இருக்கும் பணம் லாபத்தில் செல்கிறதா?என்பதை தினமும் உங்களால் பார்க்க முடியும்.

8.உங்கள் கணக்கை பற்றிய தகவல் தினம் தினம் உங்கள் கைபேசிக்கு SMS மூலமாகவும் உங்கள் MAIL IDக்கு மும்பையில் இருக்கும் பங்குசந்தை தலைமை அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைப்பார்கள்.







கொடுக்க வேண்டிய ஆவணங்கள்




1)போட்டோ.

2)ரேசன் கார்டு.

3)வாக்காளர் அடையாள அட்டை.

4)டிரைவிங் லைசன்ஸ்.

5)பான் கார்டு.

6)பேங்க் ஸ்டேட்மெண்டு கடந்த 6 மாதம்.






காற்றோடு சொல்லி போனாயே...

Tuesday, March 27, 2012

மாலை மங்கும் நேரம்.

காற்றில் ஈரம் அதை யார் தந்ததோ...???

பழமொழிகள்

  பழமொழிகள் 


பேசும்முன் கேளுங்கள்
எழுதும்முன் யோசியுங்கள்.

 செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்.

சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.

யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர்.
கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

நான் மாறும்போது தானும் மாறியும், 
நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் 
நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு 
சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. 
அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. 
திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

முழுமையான மனிதர்கள் இருவர்.
 ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. 
மற்றவர் இறந்துவிட்டார்.

ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்.

எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்.

நல்லவர்களோடு நட்பாயிரு.
 நீயும் நல்லவனாவாய்.

காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை
ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை.

இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட
இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்.

யார் சொல்வது சரி என்பதைவிட  எது சரி என்பதே முக்கியம்.

ஆயிரம் முறை சிந்தியுங்கள்
ஒருமுறை முடிவெடுங்கள்.

பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்.

நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக 
ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்.

உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் 
பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்.

உண்மை தனியாகச் செல்லும்
 
பொய்க்குத்தான் துணை வேண்டும்.

வாழ்வதும் வாழ விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே 
கண்டிப்பாக ஏமாந்து போகிறான்.

உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்.

செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் 
அப்போது தான் முன்னேற முடியும்.

அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் 
ஆர்வத்துடன் பணிபுரிவர்.

வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன்
இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்.

தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை 
சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்.

ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்.

சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது .



Monday, March 26, 2012

இன்று இறுதி அஞ்சலி

                                                                       இறுதி அஞ்சலி








                                                                    

                                                                               

 என் இதயத்தை
இயக்கும் இனியவளே
இது உனக்கான
என்
கடைசிக் கவிதை.

உன்னிடம் சொன்னேன்
காற்றுக்கு பதில்
உனை மட்டுமே
சுவாசிக்கிறேன் என்று.
நீ
முன் அறிவிப்பின்றி
மூச்சு குழாயில்
முடிச்சு போட்டாய் .

உனக்காக
காத்திருந்த காலங்களில்
என் கை ரேகையும்
உதிர்ந்து போனது.

உன்னோடு
பேசாத நாட்களில்
மூச்சு காற்றை கூட
முயன்றுதான் சுவாசித்தேன்.
நீ வரமாட்டாய் என்று
தெரிந்தே
காத்திருந்தேன்
தினமும்.

இரவுகள் பல
உன் புகைபடத்தில்
என்னை
புதைத்து இருக்கிறேன்.
உன் சிரிப்பினால்
பல தடவை
சிதைந்திருக்கிறேன்.

என் கண்ணீர் துளிகள்
அத்தனையும்
உனக்காய்
செலவழித்த பின்னே
சேமிப்பதற்கு
ஒன்றுமில்லை.
அதனால்
இதுவே என் கடைசி துளி...

இந்த வேதனையை
விரும்புகிறேன்
அது உன்னால் என்பதால்.

உன் பெயர்
சொல்லும்போது
எதோ ஒரு உணர்வை
எனக்குள் உணர்கிறேன்.
அதை
கவிதையில்
எழுதும் முன்னே
கவிதை வரிகள் கூட
பேனா மைக்குள்
கரைந்து விடுகிறது.

எனக்கு கனவுகள் தந்தது
நீதான்...
காத்திருப்பதிலும்
சுகம்  உணர்த்தியது
நீதான்...
எனக்குள் உயிரணுக்களை
உற்பத்தி செய்ததும்
நீதான்...

என்னை தனிமையில்
தனிக்க விட்டு
சென்றவளே
இழந்துவிட்ட நாட்களை
இன்னும்
இரவில் தேடிகொண்டிருகிறேன்.

உன்னால் நான் படும்
வேதனையை
என் தாயால்
தாங்கிகொள்ள முடியவில்லை.

எனக்கு பெண் பார்க்கும்
படலம்
தினமும்
நடந்து கொண்டுதான்
இருக்கிறது.

நீ தான் நம் காதல்
குழந்தையை
தெருவில் வீசிவிட்டு
சென்றாய்
என்னால் தான்
தூக்கி ஏறிய இயலவில்லை.

காதல் என்பது
கவிதை போல
அது
எழுதியவனை தவிர
நிறைய பேருக்கு
புரிவதில்லை.

ஆனால்...!!!

விருப்பமில்லாமல்
கேட்கிறேன்
விடுதலையை
உன் நினைவிலிருந்து
என்னை
விடுவித்து விடு.

என் காதலுக்கு
மரணமில்லை.
ஆனாலும்
அதற்கு
இன்று இறுதி அஞ்சலி...!!!


நேற்று உனக்கு நிச்சயதார்த்தம் 
    

நினைப்பதெல்லாம் நிகழ்வதில்லை

    நினைப்பதெல்லாம்



எனக்கில்லை என்று
ஆன பின்னும்
ஏன் அவளை
மறக்க மறுக்கிறாய்
ஈரமுள்ள இதயமே!


மறந்திடுவேன்
உனை
எனது இதயம்
துடிக்க
மறந்த பின்னே.


இறுதியில் உண்மை
உணர்ந்தேன்
ஆசைபடுவதெல்லாம்
அமைந்து விடுவதில்லை.


நினைப்பதெல்லாம்
நிகழ்வதில்லை
நிகழ்வதெல்லாம்
நிஜமுமில்லை.

இப்போது அவள்...???


                                                                    மறந்து விட்டேன் 


          


மறந்து விட்டேன் 

முழுவதுமாய் அவளை 

சரி 

என்ன செய்து கொண்டிருப்பாள் 

இப்போது அவள்...???

புன்னகை

                                                                           புன்னகை 


கவிதை என்றாயே

என்

காகித வார்த்தைகளை.

அப்படியென்றால்

எனை புதுபிக்கும்

உன் புன்னகைக்கு  பெயர்...???

அவள் பெயர்


அற்புதம்  






காகிதத்தில் ஓர் 
அற்புதம் 
அழகாய் அவள் பெயர்...!!! 

Thursday, March 22, 2012

அமாவாசை


                                                                    அமாவாசை



                                                                             

வானத்தில் தேடினேன் 
நிலவுதனை 
காணவில்லை இன்று.
தவம் செய்ய சென்றிருக்கும் 
அவளை போன்று 
அழகு பெற...!
இன்று அமாவாசை.

Tuesday, March 20, 2012

ரூபாய் நோட்டு


                                                                      ரூபாய் நோட்டு 



                                                                                    

சாலையில் கிடந்த
ருபாய் நோட்டிற்கு 
போட்ட போட்டி , 
சாலையோரம் நின்று, 
வேடிக்கையாய் பார்க்கிறாள் 

                                           
பைத்தியக்கார பெண் !

                                               _விநாயக்                    

நண்பன்

                                                                                நண்பன் 









அவன் பாடாய் படுத்துகிறபோது 
ஏன் பழகினோம் என்று 
யோசிக்க தோன்றுகிறதா? 

அவனை விட்டு பிரிந்தபிறகு 
ஏன் விலகினோம் என்று 
நேசிக்க தூண்டுகிறதா? 

அவன் வேறு யாருமில்லை 
உங்கள் நண்பன். 

அதிகபட்சம் உயிர்விட 
குறைந்தபட்சம் உதைபட 
உனக்கென ஒரு ஜீவன் 
உலகில் இருக்குமாயின் 
அவன் பெயர் 
உன் நண்பன். 

எந்த காரணமுமின்றி 
ஏன், எதற்க்கு, 
என்ன உறவென்றே தெரியாமல் 
உனக்கு ஒருத்தன் ஓயாமல் 
உதவி செய்கிறானா? 
அவன் பெயர் 
உன் நண்பன். 

இவனுடைய இந்த நீளமான கைகள் மட்டும்தான் 
என் கண்ணீரை கண்டதும் 
குட்டையாகிவிடுகிறது.. 
கைகுட்டையாகிவிடுகிறது...



Monday, March 19, 2012

பூவானவள்






ஏற்கனவே பூத்த பூதான் 
எனினும் 
நீ சூடும்போது
மறுபடியும் பூக்கிறதே!



Friday, March 16, 2012

காதலித்துப்பார்


       காதலித்துப்பார் 





உன்னை சுற்றி ஒளிவட்டம் தோன்றும்

உலகம் அர்த்தப்படும் 

ராத்திரியின் நீளம் விளங்கும்

உனக்கும் கவிதை வரும்

காதலித்துப்பார்...

கையெழுத்து அழகாகும்

தபால்காரன் தெய்வமாவான்

உன் பிம்பம் விழுந்தே கண்ணாடி உடையும்

கண்ணிரெண்டும் ஒளி கொள்ளும்

காதலித்துப்பார்...

தலையணையை நனைப்பாய்

மூன்றுமுறை பல் துலக்குவாய் 

காத்திருந்தால் நிமிஷங்கள் வருஷமென்பாய் 

வந்துவிட்டால் வருஷங்கள் நிமிஷமென்பாய்

காக்கைகூட உன்னை கவனிக்காது.ஆனால்

இந்த உலகமே உன்னையே கவனிப்பதாய் உணர்வாய் 

வயிற்றிற்கும் தொண்டைக்குமாய் உருண்டை 

ஓன்று உருள காண்பாய்

இந்த வானம் இந்த அந்தி இந்த பூமி இந்த பூக்கள் எல்லாம் 

காதலை கவுர வைக்கும் ஏற்பாடுகள் என்பாய் 

காதலித்துப்பார்...

இருதயம் அடிக்கடி இடம் மாறி துடிக்கும்

நிசப்த அலை வரிசைகளில்

உனது குரல் மட்டுமே ஒலிபரப்பாகும் 

உன் நரம்பே நாண் ஏற்றி உனக்குள்ளே அம்புவிடும் 

காதலின் திரைசீலையை காமம்கிழிக்கும்

ஹார்மோன்கள் நைல் நதியாய் பெருக்கெடுக்கும் 

உதடுகள் மட்டும் சகராவாகும்

தாகங்கள் சமுத்திரமாகும் 

பின் கண்ணீர் துளிக்குள் சமுத்திரம் அடங்கும் 

காதலித்துப்பார்...

பூக்களில் மோதி மோதியே உடைந்து போக 

உன்னால் உண்ணுமா?

அகிம்சையில் இம்சையை அடைந்ததுண்டா?

அழுகின்ற சுகம் அறிந்ததுண்டா?

உன்னையே உனக்குள்ளே புதைக்க தெரியுமா?

சபையில் தனிமையாகவும்

தனிமையை சபையாக்கவும்

உன்னால் உண்ணுமா?

அவ்விதம் அடைய வேண்டுமா?

ஐந்து அங்குல இடைவெளியில் அமிர்தமிருந்தும் 

பட்டினி கிடந்து பழகியதுண்டா?

காதலித்துப்பார்... 

சின்ன சின்ன பரிசுகளில் சிலிர்க்க முடியுமே

அதற்காகவேணும் 

புலன்களை வருத்தி புதுபிக்க முடியுமே 

அதற்காகவேணும் 

ஆண் என்ற சொல்லுக்கும் பெண் என்ற சொல்லுக்கும்

அகராதியில் ஏராள அர்த்தங்கள் விளங்குமே 

அதற்காகவேணும் 

வாழ்ந்து கொண்டே சாகவும் முடியுமே 

செத்துக்கொண்டே வாழவும் முடியுமே 

அதற்காகவேணும் 

காதலித்துப்பார் 

சம்பிரதாயம் சண்டை பிடித்தாலும் 

உறவுகள் உயிர் பிழிந்தாலும் 

விழித்து பார்க்கையில் உன் தெருக்கள் 

களவு போயிருந்தாலும் 

ஒரே ஆணியில் இருவரும் 

சிக்கன சிலுவையில் அறையப்பட்டாலும் 

நீ நேசிக்கும் அவனோ அவளோ

உன்னை நேசிக்க மறந்தாலும் 

காதலித்துப்பார்...



சொர்க்கம் நரகம் இரண்டில் ஓன்று 
இங்கேயே நிச்சயம் 
காதலித்துப்பார்....!!! 


     

Thursday, March 15, 2012

எனக்கு பிடித்த வைரமுத்து கவிதைகள்...

                        இலையில் தங்கிய துளிகள் 





காலப்பெருவெளியில். 
சில பத்தாண்டு கரைந்து கழிந்தபின் 
மீண்டும் கண்டு செல்ல வருகிறேன்.
உன்  காதல் திருமுகம்... 
அவ்வண்ணமே பொழியுமா? 
பூ மலிந்த பொன்முகம்
உன் கிராமம் நெருங்க நெருங்க
மார்பு கூட்டில் உயிர் வேகுதடி.
நகரா மரங்கள் நகர்வதாகவும்... 
நகரும் வாகனம் நிலை கொண்டதாகவும்...
நீளப்பொய் சொல்கிறது நெடுஞ்சாலை. 
கலாபம் கட்டி ஆடுகின்றன நிறைவேறாத கனவுகள்.
பட்டு பாவாடையின் காற்றடிப்போடு
பணிவில் திமிர்காட்டும் பார்வைகளோடு 
முலைக்கும் முலையா முன் மலர்களை சண்டையிட்டு 
முட்டும் சடை ஒதுக்கி சலங்கைகட்டிய மான்குட்டியாய் 
தரைதோயாத கலர் மேகமாய் 
வீதி மரங்களின் பூக்கள் திறந்து 
ஒட்டு மொத்த நாணத்தை உருண்டைதிரட்டி 
என் மேல் எறிந்து நீ என்னை கடந்த காலம் 
மனசெல்லாம் மார்கழிதான்... 
தெருவெல்லாம் கார்த்திகைதான்... 
ஏழோ எட்டோ இருக்குமா? பழகி வந்த ஆண்டுகளும் 
பகிர்ந்து கொண்ட வார்த்தைகளும். 
இன்றேனும் பேசு பெண்ணே... 
வாங்க! 
ஆண்டுகள் தோண்டிய அதேகுரல். 
அனால் நீ மட்டும் நீயில்லை... 
வீதியெல்லாம் வர்ணங்களை விசிறியடித்த அவள் எங்கே? 
மழை ஊறிய ஓவியமாய் சாயம் போன நீ எங்கே? 
காலம் தன்சவுக்கை பூக்கள் மீது சொடுக்காமல் இருக்கலாம். 
மீண்டும் வார்த்தைகள் தொலைத்த மொழிகளாய் நீயும் நானும். 
பூச்சரமிட்ட புகைப்படம் சொல்லியது உன் அம்மாவின் மரணம். 
சரத்தின் சருகு சொல்லியது உன் பொருளாதாரம். 
புகைப்படத்திலும் சிரிக்க தெரியாத  பாவமாய் உன் இரு பிள்ளைகள். 
தேநீர் தந்தாய்... 
பட்டுவிடக்கூடாது என்ற உன் அச்சத்திலும் 
தொட்டுவிட கூடாது என்ற உன் நடுக்கத்திலும் 
சிக்கிய கோப்பை சிறிதே தள்ளாடியது... 
வெள்ளையடிகாத சுவரில் பல்லி பார்த்து பழங்கதை பேசி 
ஓரக்கண்னால் உயிர் தடவி 
இனிமேலும் இங்கிருப்பின் 
கண்ணீரோடு உண்மைகளும் கொட்டிவிடும் என்றஞ்சி 
கும்பிட்டு வெளியேறி கடைசி விடைசொல்ல 
சன்னல் கம்பிகளில் உன் கண்கள் தேடிய போது 
கார் கதவு சாத்தவந்த கணவன் சொன்னான்.

நீங்களே அவளுக்கு தாலி கட்டி இருக்கலாம்.

உன் போல் பெண் மக்கள் ஊர் உலகில் எத்தனையோ 

                  காதலுற்ற சேதியினை காதலனுக்கு சொல்லாமல்

                      கணவருக்கு சொன்னவர்கள்...