Pages

Tuesday, April 10, 2012


இன்னமும் காணாமல் போகாதவர் பற்றிய அறிவிப்பு 




ஐந்தடி நான்கு அங்குலம் 

நல்ல சிவப்பு

மெலிந்ததேகம்

அசட்டு தனமாய் சிரிக்கும் 
ஒரு புகைப்படம் 

கீழே முகவரியும் 
தொலைபேசி எண்ணும்


மணமகன் தேவைக்கும்

காணவில்லைக்கும்

சிறிதளவு ஒற்றுமை 
வார்த்தையளவில் 
மட்டுமே உண்டு

போட்டோ பாத்தியா?

பிடிச்சிருக்கா?

கேட்கும்போது
தோன்றுகிறது 
காணவில்லை 
எவ்வளவோ 
பரவாயில்லை என்று....!!!   

No comments:

Post a Comment