Pages

Friday, October 19, 2012

அழகி ராமாயி


என் ஷேர்மார்க்கெட் தொழிலில் அடிக்கடி 500 ரூபாய் லாபம் வரும் போது அதை அலட்சியபடுத்துவது உண்டு.அதற்கு முன்னால் என் அம்மாவின் தாயாரை அதாவது என் பாட்டியை பற்றி சொல்ல வேண்டும்.நான் 5 மாத குழந்தையாய் இருந்தபோது என் தாத்தா இறந்துவிட்டார்.அன்றிலிருந்து இன்று வரை அவர் யார் கையையும் நம்பி இல்லை.காலையில் செய்த உணவை மறுநாள் இரவுவரை வைத்து உண்பாள்.அவருக்கு வயது 70 இப்போதும் மில் வேலை பார்த்து கொண்டு தினமும் 180 ரூபாய் சம்பாதிக்கிறார்.

 அவர் சம்பாதித்த பணத்தில் எனக்கு தெரிந்து அவருக்காக எதையும் வைத்து கொள்ள மாட்டாள்.அவள் சம்பாதிக்கும் மொத்த பணமும் அவளின் பேரன் பேத்திக்கு மட்டுமே..மாத கடைசியில் அவளின் பண பையில் மிஞ்சி இருப்பது 50 அல்லது 100 மட்டுமே. 3 நாட்களுக்கு முன்பு பெரியகாரிய வீட்டில் அவளை சந்தித்தேன். முன்பு பார்த்ததை விட இளைத்து இருந்தாள்.யாருக்காக இன்னும் உழைக்கிறாய் நீ உழைத்தது போதும் என்கூட வந்திரு நீ இருக்கிற வீட்டை வாடகைக்கு வச்சிரு 1500
கெடைக்கும் அத உன் செலவுக்கு வெச்சுக்கன்னு பல தடவ சொல்லிட்டேன்.எனக்கு என்ன சாமி நான் இன்னும் நல்லா தானே இருக்கேன் இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு வரேன்னு சொல்லிட்டா.

என் தாய் மாமனை கூப்பிட்டு நான் பாட்டிய கூட்டிட்டு போறேன் உனக்கு அதுல ஏதாவது பிரச்சனையா மாமுன்னு கேட்டதும் நீ கூட்டிட்டு போனு சொல்லிட்டார்.நீ நாளைக்கு வந்துதான் ஆகனும்னு சொன்னேன் உடனே அழுதுட்டு என் கால பிடிக்க வந்துட்டா என் அழகி.சாமி சாமியா இருப்ப சாமி தீபாவளி போனஸ் குடுப்பாங்க அத வாங்கீட்டு சத்தியமா வரேன்னு அழுதா பாரு உசுரே போயிருச்சு.அப்பதான் எனக்குள்ள இருக்குற லூசு நாகராஜ் பேச ஆரம்பிச்சான் டேய் முட்டா.................. நீ ஒரு மாசம் புடுங்கி மாதிரி வந்த லாபத்தை எடுக்காம விடரையே அது உன் பாட்டியோட வருஷ போனசுடானு சாட்டைல விழுந்த மாதிரி இருந்துச்சு.சீக்கிரமே அவளை என்னோடு கூட்டிட்டு போய் நல்லா வெச்சு பாத்துக்கணும் அதுதான் என் அப்பனை விட என் அம்மாவை விட என் மேல அவ வெச்ச பாசத்துக்கு குடுக்கற மரியாதை.
ரெஸ்ட் எடுன்னு சொன்னா அவகிட்ட அடிக்கடி வருகிற பதில் என்ன தெரியுமா????

என் அப்பன் தன்னோட 97 வயசுலயும் தென்னை மட்டையில தடுக்கு பின்னி வருகிற காசுலதான் சாப்பிட்டார்.என் அம்மா 90 வயசுலயும் ஆடு மேச்சு அதுல வர காசுலதான் சாப்பிட்டா நான் எப்படிடா இந்த வயசுல ரெஸ்ட் எடுக்கறதுன்னு கேட்பா.எனக்கும் ரோல் மாடல்  இந்த 3 பேரும்தான்.என் பாட்டியின் அப்பா ஏகாதசி அன்னைக்கு இறந்தார்.அந்தன்னைக்கு இறந்தவங்க சொர்கத்துக்கு போவாங்கனு ஐதீகம்.என் அழகி சொர்கத்துக்கு போவாளா?இல்லையான்னு? எனக்கு தெரியாது.ஆனால் என் வீடு அவள் வந்தால் சொர்கமாகிடும்.

No comments:

Post a Comment